Sunday, September 5, 2010

சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி!சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி

பழுத்த சுமங்கலியா இருந்தனையே! நீ

பழம் ஆனதால் பறித்தானோ பகவானே! ஒருவரையும்

கோளாறு சொல்லாத ஒனக்கா கிட்டினியில் கோளாறு!

போன சனி பாசத்துடன் பார்க்க வந்தனையே

பொணமாய் அனுபினோமே இந்த சனியே

கண்கள் குளமாகி நிற்குதிங்கே

மனசும் வலியாகி போனதிங்கே

ஒத்தா ஒர்ர்படியாய் இருந்ததினால்

ஓடி வந்தனையோ என்னிடமே

அம்மாவிடம் சொல்லாத பலகதைகள்

அன்பான உன்னிடமே சொல்லிரிக்கேன்

உன்னைபோல் அன்பான பெண்ணொருத்தி

லோகத்தில் பிறப்பாளோ இன்னொருத்தி

எங்கேயும் போக மாட்டாய் நான் அறிவேன்

சந்தேகம் இல்லையம்மா எனக்கிங்கே

எங்களுடன் இருக்கவேணும் சத்தியமா

நீதானே எங்களுக்கு தெய்வம்மம்மா

23 comments: 1. நேற்று இறந்து போன என் ஓர்படிக்கு பாடினது!

  ReplyDelete
 2. அருமையான கவி நெஞ்சை நெகிழ வைத்தது

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. மீண்டும் உங்கள் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள்.

  ReplyDelete


 4. ஹைஷ் சார்! நன்றி!

  ReplyDelete


 5. இமா! உங்கள் அனுதாபம் நேக்கு ஆறுதலாருக்கு!

  ReplyDelete
 6. Maami! I am very sorry for your loss. May god rest your manni's soul. I pray god to give you and your family strength in this time of harship.

  anpudan
  ila

  ReplyDelete
 7. உங்கள் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள்.

  ReplyDelete
 8. ரொம்ப உருக்கமா எழுதிருக்கேள் மாமி. ஆழ்ந்த அனுதாபங்கள். படிக்கறச்ச மனசு கஷ்டமா போயிடுத்து. அவா்கள் கொடுத்துவைத்தவர்கள் மாமி... நான் அன்றே சொன்னது போல்.

  ReplyDelete

 9. நன்றி!இலா! ஆனா தமிழ்ல எழுதுங்கோ!PLS---------

  நன்றி!ஜெய்லானி!

  நன்றி ! ராதா!

  ReplyDelete
 10. உ மாமி, படிக்கவே மனம் பாரமாகி விட்டது. இறப்பு என்பது மிகவும் கொடியது.
  என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete

 11. வாணி! என்ன பண்றது! போன வாரம் பேசிண்டு

  எங்களோட இருந்த சாலி மன்னி இப்போ இல்லை!

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்!

  ReplyDelete


 12. என்னையும் மதிச்சு என் பிளாக்குக்கு வந்து

  பதிவு போட்ட அன்புள்ளங்களை நெனச்சு நான்

  பெருமை படரேன்!நன்றி சொல்லிக்கறேன்!

  ReplyDelete
 13. படித்து விட்டு மனசு கனத்து வலிக்குது மாமி.

  என்ன செய்வது எல்லாம் இறைவன் சித்தம்.
  ஆண்டவன் உங்கள் குடும்பத்துக்கு தாங்கிக்கூடியசக்திய கொடுக்க்கட்டும்.

  ReplyDelete


 14. ஜலிலா! என்னபண்ணறது!

  இன்னியோட அவுங்க இறந்து போய் 15 நாள்

  ஆயுடுத்து!

  யாருக்காவும் காலம் காத்துருக்கறதுல்லை!

  ReplyDelete
 15. ஆழ்ந்த அனுதாபங்கள்... உடல் நிலையற்றது.. என்ன செய்ய...?

  ReplyDelete
 16. மாமி, இப்பதான் ப்ளாக் பக்கம் வந்தேன், சுமங்கலி போயிருக்காளே அதை நினைத்து பாருங்க. வருத்தப்படாதீங்க.

  ReplyDelete
 17. மாமி என்னாச்சு..ப்ளாக் இல் ஒரு பதிவையும் காணோம்..ஒழுங்கா செமத்தியா ஏதாவது பதிவை போடுங்க..
  இப்படிக்கு,
  உங்கள் ரசிகை ஆனந்தி..

  ReplyDelete
 18. குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

  ReplyDelete
 19. மரணத்தின் வலி அதிகம் தான்.. ஆனா அதிலேயே தங்கிட முடியாதே!! “watever haapends life must go on" (தசாவதாரம் ல அந்த ஜாப்பனீஸ் பொண்ணு சொல்றது தான்.. )

  அதனால் இந்த துக்கத்தை துடைச்சுட்டு கலக்கலா பிளாக்குக்கு வாங்க மாமி.. பல ரசிகைகளும் உங்க பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கோம்.. :)

  ReplyDelete


 20. இதுலேந்து என்ன தெரியர்துனா!

  நேக்கு நிறய ஃபேன்ஸ் இருக்கானு தெரியர்து!

  ReplyDelete
 21. ரசிகைகள் இருக்கிறாங்கதான் ஆனா நீங்க பதிவு போடாம பதில் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு இருந்தீங்க அப்புறம் ரசிகை மன்றத்தைக் கலைச்சுடுவோம்.. ;)ஆமா!!

  ReplyDelete


 22. அந்தமாறி நல்ல காரியம் செஞ்சுபுடாதீங்கோ!

  தமிழ்நாட்ல சுனாமி வந்துடும்!

  ReplyDelete
 23. ஆறுதல் சொல்லும் உங்களுக்கே ஆறுதல் சொன்னால் அது ஒரு மாறுதலான விஷயமே.வலியைத்தாங்கும் வலிமை உங்களிடம் இல்லாமலா? அந்த வலிமைக்கு மோஹனானு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிவீர்களா? சோர்வுக்கு தீர்வு சொல்லும் உங்களின் திடம் வேண்டும் இப்போது. BE BOLD
  அன்புடன்
  ஆஷிக்

  ReplyDelete