Monday, August 30, 2010

பரங்கி பேட்டை!



நான் படிச்சது சேவாமந்தீர் ஸ்கூல், பரங்கி பேட்டை!

முத முதல்ல டைபாய்டு ஜுரம் வந்தபோது பிளட் டெஸ்ஸ்டூக்கு நான் பண்ணின அமக்களம் !

அவா என்னை கொலை பண்ண வந்தாமாறி நான் கத்தின கத்தல்.........

4 பேரா சேந்து அமுக்கி ............. அப்பரம்தான் பிளட் எடுக்க முடிஞ்சது!

அதே மாறி 6 வயசாருக்கறச்செ காதுல சிலேட் குச்சியை போட்டுண்டு

அதை எடுக்க வந்த ஆசாரி எங்க இருக்குனு பாக்க நெருப்பு துண்டத்தை கொண்டு வந்தார்!

அதை என் காதுலதான் போடவரார்னு நான் பண்ணிய அளப்பரயை நெனச்சு நெக்கு ந்நானே சிரிச்சுக்கறென்!

Saturday, August 28, 2010

நான் மகான் அல்ல!



வயலன்சை அழகாக காண்பிச்ச டைரக்டருக்கு மொதல்ல ஒரு சல்யூட்!

கார்த்தி பேசர இன்னசண்ட் பேச்சுகள் நான் பேசர மாறியே இருக்கு!

கடைசில அஞ்சாதே படத்துல பிரசன்னாவை அதால அடிச்சா தேவலைனு

நான்
நெனச்ச மாறியே டைரக்டர் பண்ணிருப்பார்!

அதே மாறி இந்த படத்துல வில்லன்களை ஓட ஓட வெரட்டி கொல்லனும்னு

நான்
நெனச்சென்!

ஹீரோவும் அதையே செஞ்சபோது என்னை அறியாம தியேட்டர்ல எ ழுந்து

கை
தட்டினேன்!

Sunday, August 15, 2010

மதுரை மீனாஷி!


குறை ஒன்றும் இல்லை மதுரை மீனாஷீ

குறை ஒன்றும் எனக்கில்லையே!

குறை ஒன்றும் எனக்கில்லையே!


கொடியுடனே மதுரைதனில் நிற்கின்றாய் மீனாஷி

மீன் கொடியுடனே நீயும் நிற்பதனால் எனக்கு (குறை)

கண்முன்னே அழகாய் காட்சிதரும் மீனாஷீ

கண்முன்னே அழகாய் காட்சி நீ தருவதால் எனக்கு (குறை)

Friday, August 6, 2010