Sunday, September 5, 2010

சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி!



சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி

பழுத்த சுமங்கலியா இருந்தனையே! நீ

பழம் ஆனதால் பறித்தானோ பகவானே! ஒருவரையும்

கோளாறு சொல்லாத ஒனக்கா கிட்டினியில் கோளாறு!

போன சனி பாசத்துடன் பார்க்க வந்தனையே

பொணமாய் அனுபினோமே இந்த சனியே

கண்கள் குளமாகி நிற்குதிங்கே

மனசும் வலியாகி போனதிங்கே

ஒத்தா ஒர்ர்படியாய் இருந்ததினால்

ஓடி வந்தனையோ என்னிடமே

அம்மாவிடம் சொல்லாத பலகதைகள்

அன்பான உன்னிடமே சொல்லிரிக்கேன்

உன்னைபோல் அன்பான பெண்ணொருத்தி

லோகத்தில் பிறப்பாளோ இன்னொருத்தி

எங்கேயும் போக மாட்டாய் நான் அறிவேன்

சந்தேகம் இல்லையம்மா எனக்கிங்கே

எங்களுடன் இருக்கவேணும் சத்தியமா

நீதானே எங்களுக்கு தெய்வம்மம்மா