Sunday, October 10, 2010

சின்னசின்னஆசை!!


சின்ன சின்ன ஆசை!!?? சிரித்து வாழ ஆசை!!

முத்து முத்து ஆசை! முடிவில்லா ஆசை!!

முதலைமேல் ஏறி முத்தெடுக்க ஆசை!

ஷார்க் மேல் ஏறி சுற்றி வர ஆசை!

டால்ஃபினுடன் சேர்ந்து டைவ் அடிக்க ஆசை!

ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் ஆசை!!

குறும்படம் தன்னை எடுப்பத்ற்கும் ஆசை!

குட்டி பாப்பாவாய் நானும் மாறிவிட ஆசை!!

அறுசுவையில் தினமும் அரட்டை அடிக்க ஆசை!

அஞ்சாமல் இரவில் நடப்பதற்கும் ஆசை!!

சூரியனை தொட்டு சுட்டு கொள்ள ஆசை!

சந்திரனில் இறங்கி சாய்ந்து கொள்ள ஆசை!!

( ஆசை வளரும்)

Sunday, September 5, 2010

சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி!சாலி மன்னி என அன்போடு எங்களால் அழைக்க படும் விசாலம் மாமி

பழுத்த சுமங்கலியா இருந்தனையே! நீ

பழம் ஆனதால் பறித்தானோ பகவானே! ஒருவரையும்

கோளாறு சொல்லாத ஒனக்கா கிட்டினியில் கோளாறு!

போன சனி பாசத்துடன் பார்க்க வந்தனையே

பொணமாய் அனுபினோமே இந்த சனியே

கண்கள் குளமாகி நிற்குதிங்கே

மனசும் வலியாகி போனதிங்கே

ஒத்தா ஒர்ர்படியாய் இருந்ததினால்

ஓடி வந்தனையோ என்னிடமே

அம்மாவிடம் சொல்லாத பலகதைகள்

அன்பான உன்னிடமே சொல்லிரிக்கேன்

உன்னைபோல் அன்பான பெண்ணொருத்தி

லோகத்தில் பிறப்பாளோ இன்னொருத்தி

எங்கேயும் போக மாட்டாய் நான் அறிவேன்

சந்தேகம் இல்லையம்மா எனக்கிங்கே

எங்களுடன் இருக்கவேணும் சத்தியமா

நீதானே எங்களுக்கு தெய்வம்மம்மா

Monday, August 30, 2010

பரங்கி பேட்டை!நான் படிச்சது சேவாமந்தீர் ஸ்கூல், பரங்கி பேட்டை!

முத முதல்ல டைபாய்டு ஜுரம் வந்தபோது பிளட் டெஸ்ஸ்டூக்கு நான் பண்ணின அமக்களம் !

அவா என்னை கொலை பண்ண வந்தாமாறி நான் கத்தின கத்தல்.........

4 பேரா சேந்து அமுக்கி ............. அப்பரம்தான் பிளட் எடுக்க முடிஞ்சது!

அதே மாறி 6 வயசாருக்கறச்செ காதுல சிலேட் குச்சியை போட்டுண்டு

அதை எடுக்க வந்த ஆசாரி எங்க இருக்குனு பாக்க நெருப்பு துண்டத்தை கொண்டு வந்தார்!

அதை என் காதுலதான் போடவரார்னு நான் பண்ணிய அளப்பரயை நெனச்சு நெக்கு ந்நானே சிரிச்சுக்கறென்!

Saturday, August 28, 2010

நான் மகான் அல்ல!வயலன்சை அழகாக காண்பிச்ச டைரக்டருக்கு மொதல்ல ஒரு சல்யூட்!

கார்த்தி பேசர இன்னசண்ட் பேச்சுகள் நான் பேசர மாறியே இருக்கு!

கடைசில அஞ்சாதே படத்துல பிரசன்னாவை அதால அடிச்சா தேவலைனு

நான்
நெனச்ச மாறியே டைரக்டர் பண்ணிருப்பார்!

அதே மாறி இந்த படத்துல வில்லன்களை ஓட ஓட வெரட்டி கொல்லனும்னு

நான்
நெனச்சென்!

ஹீரோவும் அதையே செஞ்சபோது என்னை அறியாம தியேட்டர்ல எ ழுந்து

கை
தட்டினேன்!

Sunday, August 15, 2010

மதுரை மீனாஷி!


குறை ஒன்றும் இல்லை மதுரை மீனாஷீ

குறை ஒன்றும் எனக்கில்லையே!

குறை ஒன்றும் எனக்கில்லையே!


கொடியுடனே மதுரைதனில் நிற்கின்றாய் மீனாஷி

மீன் கொடியுடனே நீயும் நிற்பதனால் எனக்கு (குறை)

கண்முன்னே அழகாய் காட்சிதரும் மீனாஷீ

கண்முன்னே அழகாய் காட்சி நீ தருவதால் எனக்கு (குறை)

Friday, August 6, 2010