Sunday, October 10, 2010

சின்னசின்னஆசை!!

உ
சின்ன சின்ன ஆசை!!?? சிரித்து வாழ ஆசை!!

முத்து முத்து ஆசை! முடிவில்லா ஆசை!!

முதலைமேல் ஏறி முத்தெடுக்க ஆசை!

ஷார்க் மேல் ஏறி சுற்றி வர ஆசை!

டால்ஃபினுடன் சேர்ந்து டைவ் அடிக்க ஆசை!

ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் ஆசை!!

குறும்படம் தன்னை எடுப்பத்ற்கும் ஆசை!

குட்டி பாப்பாவாய் நானும் மாறிவிட ஆசை!!

அறுசுவையில் தினமும் அரட்டை அடிக்க ஆசை!

அஞ்சாமல் இரவில் நடப்பதற்கும் ஆசை!!

சூரியனை தொட்டு சுட்டு கொள்ள ஆசை!

சந்திரனில் இறங்கி சாய்ந்து கொள்ள ஆசை!!

( ஆசை வளரும்)

39 comments:

  1. மாமி என்ன இப்படி எல்லாம் ஆசைபட்ரேள், இதேல்லாம் நடக்குமா?>
    கண்ண மூடுங்க கனவில் நடக்கும்.

    குறும்படம், அறுசுவை இந்த ஆசை நடக்கும்

    ReplyDelete
  2. நியாயமான ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் :)

    குறைந்தபட்சம் ஹாலிவுட் படத்திலாவது நடித்தால் அந்த படத்தையும் நானே விமர்சனம் பண்ணலாம் ;)

    ReplyDelete
  3. சின்ன சின்ன ஆசை
    சிஷ்யையின் ஆசை நிறைவேற ஆசை
    முத்து முத்து ஆசை
    மாமியின் முடிவிலா ஆசை
    எல்லாமே நிறைவேற ஆசை :)

    ReplyDelete
  4. உ

    ஜலிலா !இதெல்லாம் நடக்காத ஆசை !

    அதான் இங்க வந்துருக்கு!

    ReplyDelete
  5. உ

    நாகை சிவா!

    அடராமா!

    //நியாயமான ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் :)//

    இதுல உள்குத்து இருக்கே!

    //குறைந்தபட்சம் ஹாலிவுட் படத்திலாவது நடித்தால் அந்த படத்தையும் நானே விமர்சனம் பண்ணலாம் ;) //


    இது உங்க ஆசையா! பேஷ் ! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு!

    ReplyDelete
  6. உ

    //சின்ன சின்ன ஆசை
    சிஷ்யையின் ஆசை நிறைவேற ஆசை
    முத்து முத்து ஆசை
    மாமியின் முடிவிலா ஆசை
    எல்லாமே நிறைவேற ஆசை :)//

    குரு வாழ்த்தினா நிறைவேறும்!!

    ReplyDelete
  7. ஆசைகள் அவ்வளவுதானா? இன்னம் ஏதானும் பாக்கி
    இருக்கா?

    ReplyDelete
  8. //டால்ஃபினுடன் சேர்ந்து டைவ் அடிக்க ஆசை!//

    மாமீ ...!! ஐயோ பாவம் முதல்ல டால்ஃபின் தாங்குமான்னு பாருங்க ...!!

    ReplyDelete
  9. //ஷார்க் மேல் ஏறி சுற்றி வர ஆசை!//

    ஷார்க் என்ன பாவம் பண்ணுச்சோ தெரியலியே...ஹி..ஹி..!!

    ReplyDelete
  10. //ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் ஆசை!!//

    ””ஹாலிவுட் “” படத்தில யாரு ஹீரே...?..யாரு டைரக்டர்...?

    ReplyDelete
  11. //சூரியனை தொட்டு சுட்டு கொள்ள ஆசை! //

    உச்சி வெயில் நேரத்தில் ஒரு லென்ஸ் கீழே கையை வைத்தால் உடனே ஆசை நிறை வேறும் ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  12. நல்ல ஆசைகள் உடனே நிறை வேற என்னோட பிராத்தனைகள் ..!!!

    ReplyDelete
  13. உ

    கோமு !

    அதான் முடிவில்லா ஆசைனு சொன்னேனே!

    என்னை மறக்காத ஃப்ரண்டுக்கு நன்றி!

    ReplyDelete
  14. உ

    @ ஜெய்லானி!

    //மாமீ ...!! ஐயோ பாவம் முதல்ல டால்ஃபின் தாங்குமான்னு பாருங்க ...!! //

    //ஷார்க் என்ன பாவம் பண்ணுச்சோ தெரியலியே...ஹி..ஹி..!! //

    //உச்சி வெயில் நேரத்தில் ஒரு லென்ஸ் கீழே கையை வைத்தால் உடனே ஆசை நிறை வேறும் ஹா..ஹா...ஹா... //

    இதெல்லாம் நீங்க சொல்வேள்னு எதிர் பார்த்தேன்!

    நீங்க சொல்லலேனா நானே என் ஆசைகளை விமர்சிக்கலாம்னு இருந்தேன்!

    நேக்கு அப்படியும் ஒரு ஆசை!ஜிஜிஜிஜி!

    //””ஹாலிவுட் “” படத்தில யாரு ஹீரே...?..யாரு டைரக்டர்...? //

    என் ஹப்பிதான் ஹீரோ! அவர்தான் சூப்பர் மேன் ஆச்சே!

    நீங்க வேனா டைரக்ட் பண்ணுங்கோ!

    நீங்க கொடுக்கபோற தங்க பானையே

    உங்களுக்கு கொடுதுடரேன்! கிஃப்டா!

    // நல்ல ஆசைகள் உடனே நிறை வேற என்னோட பிராத்தனைகள் ..!!!//

    நேக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

    இது ஜெய்லானி சொன்னது இல்லை!

    யாரது! அவர் பேர்ல வந்து பொய் சொல்லறது!

    ReplyDelete
  15. உ

    @ ஜெய்லானி!

    //முதலைமேல் ஏறி முத்தெடுக்க ஆசை!//

    இதை பாக்கலியா!

    இருங்கோ இதுக்கு விமர்சனம் எப்படின்னு சொல்றேன்!

    நான் ஏறின உடனே முதலை வெயிட் தாங்காம செத்துடும்!

    அப்புறம் முத்தாவது !எடுக்கறதாவது!

    ReplyDelete
  16. மாமி சின்ன சின்ன ஆசை என்று சொல்லி எல்லாம் பெரிய பெரிய ஆசையால்ல இருக்கு.

    முதலை மேல் ஏறி முத்தெடுக்க ஆசை.. (மாமி முதலை வாலால ஒரு போடு போட்டோ தாங்குவோமா)

    ஷார்க் மேல ஏறி சுற்றி வர ஆசை..( மாமி ஷார்க் மேல ஏறி உக்காரும்போது ஜாக்கிரதை. அது டைவ் அடிக்கும்போது உங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிக்கவே முடியலையே :(

    ஹாலிவுட்ல நடிக்க ஆசையா..( மாமி இதுல நாகை சிவா சார் வேற விமர்சனம் பண்ண ரெடியா இருக்கார். ஆனா படம் எடுக்க தான் ஆளைக்காணோம். யாராவது மாமிய வச்சு படம் எடுங்கப்பா... )

    கவிதை சூப்பர் மாமி.. உங்க இந்த சின்ன சின்ன (தம்மாத்துாண்டு) ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. உ

    ராதா! இன்னும் இருக்கு! ஆசை!

    வளரும்னு போட்டுருக்கேன்!

    பாக்கலியா!ஜிஜிஜிஜி!

    ReplyDelete
  18. வாவ்!! சுப்பர் சுப்பர் ஆசை மம்மி!! :):)

    ReplyDelete
  19. உ

    வாம்மா சின்ன பொண்ணே!

    டாங்க்ஸ்! ஜிஜிஜி!

    ReplyDelete
  20. அம்மாவின் ஆசையை வீட்டின் கடைக்குட்டி நிறைவேத்தும்மா.. பாவம் அம்மாக்கு மாட்டுவண்டி சவாரி, குதிரை சவாரி, யானை சவாரி எல்லாம் வேணாமா (நல்லவேளை யானை,குதிரை, மாடு தப்பிச்சுது), அம்மாக்கு ஷார்க் சவாரி, முதலை சவாரி வேணுமாம்.. ஆசையை சூப்பர்னு சொன்னா மட்டும் போதுமா.....

    ReplyDelete
  21. உ

    ராதா! மாமியாஇ பிடிகலேனா நேரடியா சொல்லிடு!

    நீ சொல்றதை நிஜம் நு நம்பி

    என்னை ஷார்க் கோட அனுப்பிடிவா!

    ReplyDelete
  22. என்ன மாமி இங்க நடக்குது?? இவளவு ஆசையா?? நகைச்சுவையாவும்,கலக்கலாவும் பாட்டு எழுதிருக்கிங்க..இனி வைரமுத்து கத அவளவுதாணு நினைக்கிறேன்..அடிக்கடி உங்க ப்ளாக் இல் ஏதாவது போட்டு தள்ளிட்டு போங்க மாமி..

    ReplyDelete
  23. உ

    யாரு அது! ஆஆஆஆஆஆஆஆஆஆனந்தியா!

    நம்ப முடிய வில்லை!இல்லை !இல்லை!

    ReplyDelete
  24. உ மாமி, நான் ஹாலிவுட்ல ஒரு படம் எடுக்க போறேன். ஹீரோயினு நீங்க தான். ஹீரோ நம்ம டாம் குரூஸ் அண்ணாத்தை தான்.

    ReplyDelete
  25. மோகனா, நலமா? நல்லாதான் இருக்கு உங்க ஆசையெல்லாம். மீதி ஆசைகள் எப்போ போடுவீங்க? அதை பார்க்க எனக்கு ஆசை :)

    ReplyDelete
  26. உ

    வானதி! டாம் & ஜெரில வர டாம் தானே!

    ஹையா! ஜாலி!

    ReplyDelete
  27. உ

    @ அஸ்மா!

    வரும்ம்ம்ம்ம்ம் ...............!ஆனா

    வராது...................!

    ReplyDelete
  28. முதல்ல முதலை மேல நடந்துட்டு வாங்க
    திரும்பி வந்தா உங்களுடைய மத்த ஆசையெல்லாம்
    கண்டிப்பா நிறைவேறும்.
    ஆனாலும் உங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே
    இருக்கிறதுதான் நல்லது..
    ஆசைகளை படிக்கும்போதே
    மரணபயம் வருது

    ReplyDelete
  29. உ

    நான் ஏறினா முதலை தாங்குமா!ஆசானே!

    ஆசைகளை படிச்சதுக்கே இப்படியா!

    ReplyDelete
  30. அருப்புக்கோட்டையில் ஒரு மாமியின்
    ஆசைகள் கண்டு ஊரில பதட்டமான சூழ்நிலை
    நிலவுகிறது, சம்பவதன்று உ மாமி என்பவர்
    மாவட்டக்கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை தாக்கல் செய்தார்
    அந்த மனுவில் தனது ஆசைகளை விவரித்திருந்தார்
    அந்த ஆசைகளை படித்த மாவட்டக்கலெக்டருக்கு திடீரெனா நெஞ்சு வலி ஏற்பட்டு அவசர அவசரமாக மருத்துமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து
    ஒரு மாவட்ட கலெக்கடரையே ICU Ward க்கு அனுப்பிய இந்த
    கொடூரமாமியை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
    ஆனால வீசிய வலையில் மாமியுடன் சேர்ந்து முதலையும் வந்ததால் போலீஸார் மாமியை கைது செய்யும் முயற்சியை கை விட்டனர்.காரனம் முதலை செத்துகிடந்தது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ReplyDelete
  31. உ

    ஆஹா! என்னா கமெண்டூ! சலாம் அலேக்கும் ஆசானே!

    ReplyDelete
  32. மாமி நீங்க சலாம் சொல்லாதீங்க எனக்கு பயமா இருக்கு, எனக்கு ஊயிர் வாழ ஆசை அதுனால பக்கதுல வந்துராதீங்க. எப்ப முதலை மேல சவாரி செய்ய் ஆரம்பிச்சீங்களோ அப்ப இருந்து கொஞ்சம் தள்ளியே போயிருங்கோ
    பதட்டத்துடன்
    ஆஷிக்

    ReplyDelete
  33. (ஆஷிக்கு) மாமி ய என்ன நீ ரொம்ப மிரட்டுற..முதலை, மாமி கவிதை கேட்டு அதுவா தற்கொலை பண்ணிகிருச்சாம்..நீ அபாண்டமா மாமி வந்து முதலை மேல ஏறி நு சொன்னதை ஆட்சேபிக்கிறேன்...(superb டா மச்சி..பின்னிட்ட கமென்ட்..!!)
    வழக்கம்போலே சிரிப்புடன்,
    ஆனந்தி..

    ReplyDelete
  34. ///டால்ஃபினுடன் சேர்ந்து டைவ் அடிக்க ஆசை! /////

    வாவ்.... எனக்கும் அப்படி தோணிஇருக்குங்க..
    (பட்.. எனக்கு தான் நீச்சலே தெரியாதே..அப்புறம் எங்க டைவ்.. :-))) )
    உங்க சின்ன சின்ன ஆசைகள் எல்லாமே நல்ல இருக்கு..

    ReplyDelete
  35. சுப்பர் ஆசை மாமி :)

    ReplyDelete
  36. ஆசைகள்.. ;))

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    அன்புடன் இமா

    ReplyDelete
  37. மாமி உங்கள் பிரமாணாள் பாஷையை அறுசுவையில் ரொம்பவே ரசித்து இருக்கிறேன்.தொடர்ந்து கலக்குங்க.சின்ன சின்ன ஆசை ப்ரமாதம்.

    ReplyDelete
  38. சின்ன சின்ன ஆசைக்கு அப்புறமா ஆளையே கானோமே..!! சீக்கிரமா வாங்க ..!! :-))

    ReplyDelete
  39. அருட்பேராற்றலின் கருணையினால்

    தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

    இப் புத்தாண்டு முதல்

    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்

    பெற்று வாழ்க வளமுடன்.

    ReplyDelete